பிழைத்து பெருகி ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க வேண்டும்
- KIRUPASANAM MEDIA
- Aug 23, 2022
- 2 min read
பாஸ்டர் இம்மானுவேல்

புதிய ஏற்பாட்டில் தன்னைப் பற்றி பவுல் சொல்கிறார் நான் கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கிறேன். கலா 2:22, உபா 8:1
நீங்கள் பிழைத்து ( வாழ்ந்து) பெருக வேண்டும். நீங்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இருக்கும் படி விரும்புகிறேன். ஈசாக்கு பஞ்ச காலத்தில் விதை விதைத்தான். கர்த்தர் ஆசீர்வதித்தார். நகோமி பிழைக்கும் படியாக போனார்கள். ஆனால் பிழைக்க ( வாழ) முடியவில்லை. நாம் பிழைத்து ( ஆசீர்வாதித்து) பெருக வேண்டும். கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற பிதாக்களின் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க என்ன செய்ய வேண்டும். பவுலின் கப்பல் யாத்திரையில் தப்பிப் பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப் போயிற்று என்கிறார்.
பிழைத்து பெருக நாம் என்ன செய்ய வேண்டும்.
1) ஆமோஸ் 5:4 கர்த்தரை தேட வேண்டும்.
தன்னை இரட்சித்த தேவனை தேடும் போது நம்மையும், குடும்பத்தையும் பிழைக்கச் செய்வார். சங் 34:4 தாவீது கர்த்தரை தேடின போது இளைப்பாறுதல், சமாதானம் உண்டானது. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை தேடாமல் பாகால்களை தேடினதினால் வனாந்தரத்தில் அழிக்கப்பட்டார்கள். 2 நாளா 20:3, 4 யோசபாத் தனக்கு யுத்தம் நேரிட்ட போது கர்த்தரை தேடினதினால் கர்த்தர் பிழைக்க ( ஜெயம்) செய்தார்.
2) எசே 18:32 மனந்திரும்ப வேண்டும். நாகோமி பிழைக்கும் படியாக மோவாப்பை விட்டு மனந்திரும்பினதால் இயேசு அவர்களுடைய சந்ததியில் பிறந்தார். தன்னுடைய சுயவிருப்பத்திலிருந்து மனந்திரும்பியதால் பிழைத்தாள் நாகோமி. இளையகுமாரன் துன்மார்க்கத்திலிருந்து மனந்திரும்பினான். பிரதிஷ்டையை உடைத்த சிம்சோன் கடைசி நேரத்தில் மனந்திரும்பி இந்த ஒரு விசை நினைத்தருளும் என்று ஜெபித்த போது அவனுடைய பெலன் திரும்ப வந்தது. இச்சை, விருப்பம், ஆசையினால் தரிசனம், அபிஷேகம், தேவசித்ததை இழந்து இருப்போமானால் மனந்திரும்பினால் பிழைக்க முடியும்.
3) உபா 8: 3 வசனம் குறையக் கூடாது., வசனத்தினால் பிழைப்பு. கர்த்தருடைய வசனம் எங்கேயிருக்கிறதோ அங்கே பிழைப்பு உண்டாகும். நாம் பிழைப்பதற்கு ஜீவனுள்ள, வல்லமையுள்ள வசனம் இருந்தால் போதும் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வசனம் நமக்கு கிடைக்க வேண்டும். சங் 19:10, 11,105:19 யோசேப்பு உயர்த்தப்படுகிறதற்கு வசனம் புடமிட்டது.
4) ரோமர் 8:13 ஆவியினால் சரீரத்தின் கிரியைகளை அழித்தால் பிழைப்பார்கள். சரீரத்தின் கிரியைகளை அழிக்க வேண்டும். சரீரத்தைக் கொடுக்கக்கூடிய காரியங்களை அழிக்க வேண்டும். கொலோ 3:5-8 ஆகான், ஏவாள், ஆதாம் இச்சையில் விழுந்தார்கள்.
நியா 14:3 பிலேயாம் , நாகமான் பொருளாசையில் விழுந்தார்கள். ஆண்டவரை ஒவ்வொரு நாளும் வசனம் குறைக்கக் கூடாது.
5) யோவான் 11:25 விசுவாசம் பெருக வேண்டும். விசுவாசம் பிழைக்க வைக்கும். பெலன், கேடகமாய் விசுவாசம் காணப்பட வேண்டும். யூதா 1:20 கானானிய ஸ்திரியின் கண்டு உன் விசுவாசம் பெரிது என்கிறார் இயேசு. மாற் 2:5 சுமந்து வந்தவர்களின் விசுவாசத்தை கண்டு சுகத்தை கட்டளையிட்டார். நம்முடைய விசுவாசம் பெரிதாய் காணப்பட வேண்டும்.